வவுனியா புனித சூசையப்பர் ஆலயத்தில் 31 மாணவர்களுக்கு முதல் நன்மை நிகழ்வுகள்.

வவுனியா வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலயத்தில் நேற்று 31மாணவர்களுக்கு முதல்நன்மை எனும் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வுகள் ஆலய பங்குத்தந்தை எஸ். இராஜநாயகம் தலைமையில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமான மாணவர்களை தயார்படுத்தும் மறைக்கல்வி செயற்பாடுகள் கொரோனா நோய் தொற்று காரணமாக பிற்போடப்பட்டு தற்போது நாடு சுமூகமான நிலைக்கு திரும்பியதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலியின்போது ஒழுங்கு படுத்தப்பட்ட 31 மாணவர்களுக்கான முதல் திருவிருந்து எனும் அருட்சாதனம் வழங்கிவைக்கப்பட்டது.

இவ்விஷேட நிகழ்வில் மறை உரையை அருட்பணி சசி நிகழ்த்தியதுடன் அருட்சகோதரிகள், மறை ஆசிரியர்கள், பங்கு மக்கள், பெற்றோர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.