வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் 5 பெண்கள் கைது

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பெண்களை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் கீழ் செயற்படும் போதைத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பழையபேருந்து நிலையப்பகுதியில் நேற்று காலை  சோதனைகளை மேற்கொண்ட பொலிசார் விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த குற்றசாட்டில் 5 பெண்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் குருநாகல்,முல்லைத்தீவு, நெடுங்கேணி,விஸ்வமடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.