வவுனியா நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 28 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வவுனியா  குருமன்காடு பகுதியில் நேற்று மாலை போக்குவரத்து பொலிசார் வாகனச்சாரதிகளுக்கு எதிராக மேற்கொண்ட திடீர் சோதனை  நடவடிக்கையின்போது போக்குவரத்து வீதி வழிமுறைகளை பின்பற்றத்தவறிய 28 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் , 
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் ஆலோசனைக்கு அமைவாக நேற்று மாலை குருமன்காடு சந்தியில் போக்குவரத்து பொலிசார் வீதி வழிமுறைகளை மீறி மோட்டார் வாகனம் செலுத்திய 28 பேருக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது . தலைக்கவசம் இன்றி , கைத்தொலைபேசி பாவித்தல் , காப்புறுதி ஆணவம் இன்றி , மோட்டார் அனுமதிப்பத்திரம் இன்றி , மதுபோதையில் எனப்பல்வேறு விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 28 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் நான்கு பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 24 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் .
இதேவேளை இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து நகரில் முன்னெடுக்கப்படும் எனவே பொது மக்கள் சாரதிகள் போக்குவரத்துப் பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .