வவுனியா தாண்டிக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள விசேட தேவைக்குட்பட்டோரை பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் சந்தித்து கலந்துரையாடினார்

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாண்டிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து விசேட தேவைக்குட்பட்டோர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.


நேற்று மாலை 4.00 மணியளவில் தாண்டிக்குளம் கிராமசேவையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது பலதரப்பட்ட விசேட தேவைக்குட்பட்டோரின் பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்களுடைய தேவைகள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம அமைப்பைச்சேர்ந்தவர்கள், விசேட தேவைக்குட்பட்ட பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.