வவுனியா இந்து அன்பகத்தில் கோலாகலமாக இடம்பெற்ற சிறுவர் தினம்

வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் மிகவும் கேலாகலமாக இடம்பெற்றது.
ஆதரவற்ற சிறுவர்களை பல ஆண்டு காலமாக பராமரித்து வரும் வேப்பங்குளம் இந்து அன்னபகத்தின் தலைவி சாமி அம்மா தலைமையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் அங்கு வாழும் சிறுவர்களின் பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், வவுனியா உதவி பிரதேச செயலாளர், சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி, சிறுவர் நன்நடத்தை அதிகாரி, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர் உட்பட சமூக ஆர்வலர்கள் இந்து அன்பகத்தின் நிர்வாகிகள், அயலவர்கள் சிறுவர் இல்ல சிறார்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.