வவுனியா ஆலடிப்பகுதியில் குடும்பமொன்று தனிமைப்படுத்தலில் குறித்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொலிஸ் அறிவித்தல்

வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் சந்தித்து சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் வவுனியாவில் சந்தித்த குடும்பத்தினைர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குறித்த பகுதிக்கு மக்களை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தோணிக்கல் ஆலடிப்பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் சிறிய கடையொன்றினை நடத்தி வரும் குடும்பமொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.