வவுனியா ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக ஆராய்வு

வன்னியின் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா தெற்கு வலயக்கல்வி அதிகாரி எமது வலயத்தில் 1699 ஆசியர்கள் கடமையாற்றுகின்றனர். இந்நிலையில் 23 ஆசியர்களிற்கான பற்றாக்குறை காணப்படுகின்றது.கல்வியற்கல்லூரிகளில் பயிற்சியில் உள்ள ஆசிரியமாணவர்களின் மூலம் அதனை தீர்க்கமுடியும் என்று எதிர்பார்கின்றோம்.விஞ்ஞான கணித பாடத்திற்கான தட்டுப்பாடு இல்லாதநிலையில் நுண்கலைகள் மற்றும் வர்த்தக பாடத்திற்கான ஆசிரியர்களே பற்றாக்குறையாக இருப்பதாகவும், எனவே தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள நுண்கலை சார்ந்த பட்டதாரிகளை பகுதிநேரமாக கல்விச்செயற்பாடுகளில் ஈடுபடுத்து தொடர்பாக ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியா உட்பட வன்னியில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக காணப்படும் நிலையில் யாழில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை இங்கு நியமிக்கவேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்ததுடன், இல்லாவிடில் இங்கு கடமையாற்றும் ஆசிரியர்களை இடமாற்றாமல் இங்கேயே வைத்திருக்குமாறும் தெரிவித்தார்.
வன்னியில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதனால் மாணவர்களின் கல்வி பின்தங்கியிருப்பதுடன்,மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே இந்தவிடயத்தில் அனைவரும் ஆர்வத்துடன் செயற்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.