வவுனியா அரசாங்க அதிபருடன் வன்னி கட்டளை தளபதி சந்திப்பு

வன்னி படைகளின் கட்டளைத்தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் டபிள்யு.எல்.பி.டபிள்யு. பெரேரா இன்று வவுனியா அரசாங்க அதிபரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் கட்டளைத்தளபதியை அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வரவேற்றிருந்தனர். இதனையடுத்து சந்திப்பு இடம்பெற்றிருந்தது.