வவுனியாவில் வானுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன் வானுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, 
வவுனியா குருமன்காட்டில் இருந்து வவுனியா நகரத்தை நோக்கி வந்த வான் துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.