வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

வவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி மாலை வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
வவுனியா கணேசபுரம் பகுதியில் மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 34 குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடிய வன்னி மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் , சமூக ஆர்வலருமான ரசிக்கா பிரியதர்சினியின் சொந்த நிதியிலிருந்து 34 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான மேலதிக  உதவிகளை மாவட்ட அரசாங்க அதிபரூடாக பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அம்மக்களுக்கு உறுதியளித்துள்ளார் .