வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா செங்கற்ப்படை பகுதியில் வெட்டப்பட்ட முதிரைக்குற்றிகளை கடத்திச்சென்ற கெப்ரக வாகனம் பல இலஞ்சம் பெறுமதியான முதிரைக் குற்றிகளுடன் முற்றுகை.
வவுனியா செங்கற்படை பகுதியிலிருந்து கற்பகபுரம் நோக்கி மரக்குற்றிகளை கடத்திச் செல்வதாக புளியங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஈச்சங்குளம் இராணுவத்தினரும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிடாச்சூரி பகுதியில் மரக்குத்திகள் ஏற்றிச் சென்ற கெப்ரக வாகனம் துரத்தி பிடிக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி தப்பியோடிவிட்டார்.
மீட்கப்பட்ட வாகனமும் மரக்குற்றிகளும் ஈச்சங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.