வவுனியாவில் “புதியமழை” புத்தக கண்காட்சி!!

கலாசார அலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலக கலாசார அதிகாரசபையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்தககண்காட்சியும்,விற்பனையும் இன்றையதினம் காலை 10மணியளவில் வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.


“புதியமழை” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற  இப்புத்தக கண்காட்சியில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரசஅதிபர் சமன்பந்துலசேன கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மாலை 6 மணிவரையும் இடம்பெறவுள்ள இக் கண்காட்சி நிகழ்வில் வவுனியா மாவட்ட எழுத்தாளர்களின் நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் தமிழருவி,த.சிவகுமாரன்,மின்சாரசபையின் முதன்மை பொறியியலாளர் மைதிலி தாயாபரன்,ஓய்வுபெற்ற விரிவுரையாளர் ந.பார்த்தீபன்,தமிழ்மணிமேழிக்குமரன், மற்றும் மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.