வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த மரக்காலை.

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையில் இன்றயதினம் அதிகாலை 3 மணிக்கு தீடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், அவர் ஊடாக நகர சபையின் தீயணைப்பு வாகனத்திற்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த  நகரசபை தீயணைப்பு வாகனத்தின் வேகமான செயற்பாட்டினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன் பாரிய சேதம் தடுக்கப்பட்டது.

குறித்த விபத்தில் பெறுமதியான மரங்கள் எரிந்துள்ளநிலையில், ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.