வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் 40வது நினைவு தின நிகழ்வு அனுஸ்டிப்பு

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில்   தமிழுக்கும்,சைவத்திற்கும் அரும்பணியாற்றிய தனிநாயகம் அடிகளாரின் நினைவுநாள் நிகழ்வு  வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள அடிகளாரின் உருவசிலைக்கு முன்பாக இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது. 
இதன்போது அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு மலர்தூவி அஞ்சலி நிகழ்தப்பட்டதுடன் தமிழருவி சிவகுமாரன் அடிகளார் தொடர்பான நினைவுபேருரை ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா நகரசபையின் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான க. சந்திரகுலசிங்கம்,நா.சேனாதிராயா,சு.காண்டீபன்,சுமந்திரன்,தமிழ்விருட்சம் அமைப்பின் சந்திரகுமார் கண்ணன், 
பொது அமைப்புகள் மற்றும்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.