வவுனியாவில் சிறுவர் பூங்காக்கள் மூடப்பட்டது

வவுனியா நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்கள் நகரசபையின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறுவர் பூங்காக்களை இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடுமாறு சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இன்றைய தினத்திலிருந்து சிறுவர் பூங்காக்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.