வவுனியாவில் சத்தியலிங்கம் வாக்களித்தார்

9வது பாராளுமன்றத்தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்றுவருகின்றது. 
வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன்,முன்னாள் வடமகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை அளித்தார்.   
இம்முறை தேர்தலில் வன்னியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நான்கிற்கும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றும். அதிகவாக்குகளை பெற்று நான் வெற்றியடைவேன் என்றார்.