வவுனியாவில் கோவிட்-19 தொற்றாளர்கள் பயணித்த மூன்று வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

வவுனியா – நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதைச் சேர்ந்த மூன்று பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில், அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மூன்று வியாபார நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஏனைய ஊழியர்களுக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.மேலும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான தகவல்களும் சுகாதாரப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.