வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய 89 பேருக்கு கொரோனா தொற்று இல்லை

வவுனியா நெடுங்கேணியில் மாகா நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து தொற்றாளர்களோடு தொடர்புடைய 89 பேருக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் தொற்றுக்குள்ளாகியவர்களோடு நேரடி தொடர்புபட்டவர்களாக 65 பேரும் அவர்களோடு ஏனைய வகையில் தொடர்புபட்ட 24 பேருமாக 89 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த வகையில் மீண்டும்  14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர்  பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. இவ்வாறு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 32 பேர் தென்பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் அவர்கள் விரும்பத்தின் பிரகாரம் அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் ஊடாக அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை ஏனைய பிரதேசத்தவர்களும் அவர்கள் வீடுகளிலும் மாகா அலுவலகத்திலும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தார்.