வவுனியாவில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது

வவுனியா நகரிலிருந்து மாமடு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை மடுகந்தை பொலிஸார் இன்று  (12) அதிகாலை 1.30மணியளவில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,மடுகந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  வவுனியா – மாமடு செல்லும் சந்தியில்  அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைசாவடியில் மாமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை இன்று அதிகாலை வழிமறித்து  சோதனை மேற்கொண்ட போது அவர்களிடமிருந்து  2கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் 3கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடனும் 26, 36 வயதுடைய பூந்தோட்டம், றம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இருவரையும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.