வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வேலங்குளம் பகுதியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று  (02) அதிகாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  இன்று அதிகாலை வேலங்குளத்தில் உள்ள அவரது வீட்டினை சோதனை மேற்கொண்ட போது அவரிடமிருந்து  775 மில்லிகிராம் கேரளா கஞ்சா  கைப்பெற்றப்பட்டுள்ளது. வவுனியா வேலங்குளம் பகுதியை சேரந்த  26 வயதுடைய இளைஞனே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் (02) இன்று ஒப்படைக்கவுள்ளதாகபூவரசங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி  சமிந்த எதிரிசூரிய மேலும் தெரிவித்தார்.