வவுனியாவில் கமநல சேவைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வவுனியா  கமநல சேவைகள் அபிவிருத்தி  திணைக்கள  மாவட்ட காரியாலயத்தில் அமைந்துள்ள  மாவட்ட கமக்கார பயிற்சி நிலையத்தில் கமநல சேவைகள் மற்றும்  நீர்ப்பாசன,விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கிடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று (02.10.2020) இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வவுனியா,மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் கலந்து கொண்டனர்.


மேற்படி திணைக்களங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் இத்திணைக்களங்கள் சார்ந்த செயற்றிட்டங்களை எவ்வாறு  விரிவுபடுத்துவது,குறித்த திணைக்களங்கள் சார்ந்த அமைச்சர்களை வன்னி மாவட்டத்திற்கு வரவழைத்து அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட  வேண்டிய மிக முக்கியமான செயற்றிட்டங்கள் பற்றியும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.