வவுனியாவில் கத்தோலிக்க இளைஞர் யுவதிகள் ஒன்றிய வார நிகழ்வுகள்

கடந்த வாரம் கத்தோலிக்க இளைஞர் யுவதிகள் வாரமும் இவ்வாரம் மறைக்கல்வி மாணவர்கள் வாரமும் மன்னார் மறைமாவட்ட ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன .
 மறைக்கல்வி மாணவர்கள் வாரத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலய திருப்பலி வழிபாடுகளின் பின்னர் வவுனியா வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலயத்தில் மாணவர்களுக்கான நிகழ்வுகள் இடம்பெற்றது. 
குடும்ப நிகழ்வான மறை ஆசிரியர்கள் , இளைஞர்கள் , யுவதிகள் , சிறுவர்கள் பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றிய நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்களிடையே வினாவிடை போட்டிகள் , பலுான் உடைத்தல் , இறைவார்த்தைகளை ஒன்றிணைத்தல் , சங்கீதக்கதிரை போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் .
இதில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ் . இராஜநாயகம் உதவி பங்குத்தந்தை , அருட்சகோதரிகள் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது .