வவுனியாவில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு

வவுனியாவில் நேற்று காலை முதல் இன்று காலை வரையான கடந்த 24 மணி நேரத்திற்குள் 138.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி சதானந்தன் தெரிவித்துள்ளார் .
இவ் வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் பத்து வரையான காலப்பகுதியில்  886.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.  இருந்தும் இவ்வருடத்திற்குள்  இம் மாதம் கடந்த 24 மணிநேரத்திற்குள் பெய்த மழையே  அதி கூடிய மழைவீழ்சியாக பதிவாகியுள்ளது.
அதாவது நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணியரையான கடந்த 24 மணி நேரத்திற்குள் வவுனியாவில் 138.5  மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது கடந்த வருடத்தில்  மழை வீழ்ச்சியை விடவும் அதிகளவான மழை வீழ்ச்சியாக கடந்த இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் பதிவாகியுள்ளது.


மழையுடனான கால நிலை நீடிப்பதுடன் மாலை வேளைகளில் பெய்துவரும்  மழை தொடர்ச்சியாக இருக்காது எனவும்  ஓரிரு நாட்களே மழை தொடர்ச்சியாக பெய்யும் எனவும், இருந்தும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும் எனவே பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும் வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.