வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி!

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு இடையே 6 மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், 
முகக்கவசம் கட்டாயம் அணிவதுடன், பள்ளி நுழைவு வாயிலில் சானிடைசர், தெர்மல் சோதனை  கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம் எனவும், ஆனால் பெற்றோர் அல்லது காப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

பிராத்தனை கூட்டம், விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை எனவும், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் 21ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.