’’வலிமை”யில் அஜித்-ன் கதாப்பாத்திரம் இதுதான்…. டுவிட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்டிங்.

valimai ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் அஜித்குமார். பெரும்பாலான  பிரபலங்களே அவரது ரசிகர்களாகவும் அவருடன் இணைந்து  நடிக்கவும் பணிபுரியவும் ஆர்வமுடன் இருப்பதாகக் கூறுவது அவரது சிறப்பு.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார்.

ajith

இந்நிலையில்,  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியானது.

இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த வேலையில் வலிமையில் அஜித் கதாப்பாத்திரத்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற தகவல்கள் வெளியாகிறது.

valimai

இதனால் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் ஈஸ்வரமூர்த்திIPS என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.