வறட்டு இருமலை குணப்படுத்தும் எளிமையான சில முறைகள்.

துளசி அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் கண் கண்ட மருந்து. குறிப்பாக, வறட்டு இருமலுக்கு துளசி சாற்றை பருகினால் போதும். துளசி மேலோட்டமாக செயற்படாமல் வறட்டு இருமலுக்கான மூல காரணத்தையும் அழித்து இருமலையும் போக்குகிறது.

இரவில் பாலை மிதமாக சூடுபடுத்திக்கொண்டு அதில் தேன் கலந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல் காணாமல் போகும்.

11 மிளகை நன்றாக கடித்து மென்று, பின்னர் பொறுக்கும் அளவு சூடான நீரைப் பருகினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நெய்யில் மிளகு பொடி கலந்து சாப்பிட்டால், வறட்டு இருமல் சரியாவதுடன் அதனால் ஏற்பட்ட ரணமும் குணமாகும்.

உப்பு தண்ணீர் கொண்டு கொப்பளிப்பது மிகவும் நல்ல பயன்களைத் தரும். கிருமி நாசினியான உப்பு, நம் தொண்டைப் பகுதியில் உள்ள கிருமிகளை நீக்கும். கல் உப்பைப் பயன்படுத்துவது நல்லது.