வருங்கால மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து

தனது வருங்கால மாமியாரான நயன்தாராவின் தாயார் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இருவரும் இந்தாண்டுக்குள் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த விக்னேஷ் சிவன், சினிமாவில் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது அதன் பிறகுதான் திருமணம் என கூறினார்.

இந்நிலையில் இருவரும் கோவாவில் ஓய்வை கழித்து வருகின்றனர். கோவாவில் உள்ள பிரைவேட் ஹவுஸ் ஒன்றில் இருவரும் தனிமையில் கொண்டாடி வருகின்றனர். நேற்று நயன்தாரா நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்தார் விக்னேஷ் சிவன்.

அதனை தொடர்ந்து அங்குள்ள தோட்டத்தில் நயன்தாரா நைட்டியில் பூப்பறிக்கும் போட்டோக்கள் வெளியானது. விக்னேஷ் சிவன் எடுத்த அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதனை பார்த்த நெட்டிசன்கள், விக்கி ரசிச்சு ரசிச்சு எடுத்திருக்கிறார் என பாராட்டினர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மேலும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதாவது நடிகை நயன்தாராவின் தாயாருக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு தனது வருங்கால மாமியாரான அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

ஹேப்பி பர்த்டே மை டியரஸ்ட் அம்மு மிஸ்ஸஸ் குரியன் என கேக் கட் பண்ணும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்களும் நயன்தாராவின் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விக்கி ஷேர் செய்துள்ள போட்டோவின் குவாலிட்டி குறைவாக உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன தல போட்டோ குவாலிட்டியே இல்ல நான் வேணும்னா அனுப்பி வைக்கவா என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இன்னைக்கு இந்த போஸ்ட்தான் வைரல் ஆக போகுது என கூறியுள்ளனர்.