வருங்கால கணவரை கட்டியணைத்தபடி காஜல் அகர்வால் – வைரல் புகைப்படம்!

Kajal Aggarwal All Set To Get Married To Gautam Kitchlu, All You Need To  Know

பிரபல நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. அதை சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த காஜல் அகர்வால், கௌதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை நான் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மும்பையில் உள்ள ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாகவும் இந்த திருமணத்தில் எங்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இந்த கொரோனா நேரத்தில் அதிக கூட்டங்களை கூட்ட விரும்பவில்லை. மேலும், திரையுலகை தாண்டி தற்போது தான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளேன்.

தனக்காக வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் காஜல் தன்னுடைய வருங்கால கணவரை கட்டி அணைத்தபடி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.