வரவு செலவு திட்டத்திற்கு தாமதமாக வந்த ஆளும் கட்சி உறுப்பினர்

வவுனியா நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளும் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியின் பெண் உறுப்பினர் சபைக்கு தாமதமாக வருகை தந்திருந்தார்.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை பரிசீலிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

குறித்த அமர்விற்கு தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் உறுப்பினர் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரும் வரவு செலவுத்திட்டம் சபைக்கு முன் வைக்கப்பட்டபோது வருகை தந்திருக்கவில்லை.

எனினும் ஆளும் கட்சியின் உறுப்பினரான பா.ஜெயவதனி வரவுசெலவுத்திட்டம் நிறைவேறியதன் பின்னர் தாமதமாக சபைக்கு வந்திருந்தமை தொடர்பில் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.