வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் “சேஸிங்” ட்ரைலர் ரிலீஸ்!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.

நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சேவ் சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது வீரகுமார் இயக்கத்தில் சேஸிங் என்ற படத்தில் நடித்துள்ளார். மதியழகன் முனியாண்டி தயாரிக்கும் இப்படத்தில் பாலா சரவணன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள வரலக்ஷ்மி ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தியிருக்கிறார். தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.