வரமாக நீ…

தூக்கத்தின் நேரத்தினை
உன் நினைவுகள் தாலாட்டுதே.
உன்னை நினைத்திடும் பொழுதுகளில் கவி
ஒன்று அரங்கேறுதே!!
வானின் நிலவாய் நீ வந்தாய்
உன்னை இரசிக்க வைக்கும்
இரவாய் நான் வந்தேன்.

உறவாய் நீ வந்தாய்
என் உயிர் கூட்டினிலே
வரமாய் நீ வந்தாய் என்
இதய கோவிலிலே!!
உன்னை நினைக்கையிலே
மலர்கிறது மனதில் பல கவிகள்
நீ இருப்பதனால் கடக்கிறது
சுகமாய் என் பொழுதுகள்…

கரை தொடும் அலையினிலே
இரு கரம் கோர்த்து நடை பழகலாம்.
நிலவொளியில் பாட்டெழுதி
காதல் கதை உரையாடலாம்.
ஒவ்வொரு பொழுதையும் காதல்
உரையோடு பகிர்ந்திடலாம்.
தினம் தினம் தித்திக்கும் கதை
பேசி மகிழ்ந்திடலாம்.
உன் மடி சாய தினம் தவமொன்று
இருக்கிறேன்.
வரமாக நீ வந்து என் தவமதனை நிறைவு செய்வாய்.


திபீகா ஹஜேந்திரன்….