வன்னி தேர்தல்மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது

வன்னி தேர்தல்மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்ஆணைக்குழுவால் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
வாக்களிப்புதொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 4 மணிவரை- 74 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளது.
அந்தவகையில்  வவுனியா தொகுதியில்-72,
முல்லைத்தீவு தொகுதியில்-74,
மன்னார் தொகுதியில்-76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இதேவேளை சிரேஷ்டதலைமை தாங்கும் அலுவலர்கள், வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்டசெயலகத்திற்கு வருகைதந்துகொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் பிரதம தலைமைதாங்கும் அதிகாரிகளிற்கு சகலவிதமான அறிவுறுத்தல்களையும் நாம் வழங்கியுள்ளோம்.எனவே பெற்றுக்கொள்ளப்படும் வாக்குப்பெட்டிகள் சீல்செய்யப்பட்டபின்னர் நாளைகாலை 7 மணியளவில் எண்ணுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது

அந்தவகையில் வவுனியா மாவட்டசெயலகம் மற்றும், தபால் வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள  காமினிமகாவித்தியால பகுதிகள் கடுமையான பாதுகாப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.