வன்னி தபால் வாக்களிப்பில் கூட்டமைப்பு வெற்றி.

பாராளுமன்றத்தேர்தலிற்கான வன்னி மாவட்ட தாபல் மூலமான வாக்குகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் வன்னிமாவட்டத்தில் இம்முறை 12876 பேர் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். கடந்தமாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரைக்கும் தபால்வாக்குகளை அளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் 12370 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன், 11948 செல்லுபடியானவாக்குகளாக பதியப்பட்டுள்ளதுடன், 422வாக்குகள் நிராகரிக்கப்பட்டது.

அந்த வகையில் கூட்டமைப்பு- 4388

பொதுயன பெரமுன-2771

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி-736

ஈபிடிபி-662

சைக்கிள்-500

தமிழர் சமுக ஐனநாயக கட்சி-366 வாக்குகளை பெற்றுக்கொண்டது.


வன்னிமாவட்ட தபால்வாக்குகள் வவுனியா காமினிமகாவித்தியாலத்தில் அமைக்கபட்டிருந்த 13 வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.