வன்னியில் வீட்டுத்திட்டங்களுக்கு விரைவில் தீர்வு: திலீபன் எம். பி

புதிய வீட்டுத்திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள வீட்டுத்திட்ட கொடுப்பனவுகள் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் வீடமைப்புத்திட்ட இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவுணன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது வீட்டுத்திட்டம் தொடர்பாக வன்னி பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் விடயங்கள் முழுமையாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் சாதகமாக இதன் முடிவுகள் அமைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.