வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள்

வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள்

வன்னியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 69916 வாக்குகளை பெற்ற நிலையில் 3 பிரதிநதித்துவத்தினை பெற்றுள்ளது. இதில் சார்ள்ஸ் நிர்மலநாதன் 25668 வாக்குகளையும் செல்வம் அடைக்கலநாதன் 18563 வாக்குகளையும் வினோ நோகதாரலிங்கம் 15190 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

பொதுஜனபெரமுனவுக்கு 42524 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில் கே. கே. மஸ்தான் தன்னோடு போட்டியிட்ட தென்பகுதியை சேர்ந்தவரும் வன்னி தேர்தல் தொகுதிக்கு புதிய முகமாகவும் காணப்பட்ட ஜனக நந்தகுமாரவுடன் கடும் போட்டியை எதிர்கொண்டு 455 வாக்கு வித்தியாசத்தில் 13454 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி 37883 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அக்கட்சியினூடாக போட்டியிட்ட ரிசாட் பதியுர்தீன் 28203 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியானது 11118 வாக்குகளை பெற்ற நிலையில் அக்கட்சியில் 3203 வாக்குகளை பெற்ற குலசிங்கம் திலீபன் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த சிவசக்தி ஆனந்தன் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி 8780 வாக்குகளையும் ஸ்ரீடெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா தலைமைதாங்கிய தமிழர் சமூக ஜனநாயக கட்சி 10064 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 8232 வாக்குகளையும் வன்னியில் பெற்றுள்ளது.

இந்நிலையில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளாக:
க. சிவலிங்கம் 12714 வாக்குகள், ப. சத்தியலிங்கம் 12162 வாக்குகள், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா 11710 வாக்குகள், சி. சிவமோகன் 10581 வாக்குகள், செ. மயூரன் 9518 வாக்குகள், ஜி.ரி. லிங்கநாதன் 8563 வாக்குகள் பெற்றுள்ளனர்