வன்னியின் காவலன் சிவசிதம்பரத்தின் 28 ஆவது நினைவுத்தினம் அனுஸ்டிப்பு

வவுனியா வன்னியின் காவலன் என அழைக்கப்பட்ட ப. சிவசிதம்பரத்தின் 28 ஆவது நினைவுதினம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலையடியில் அனுஸ்டிக்கப்பட்டது. 
பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் நா. சேனாதிராஜா, பண்டாரவன்னியன் நற்பணி மன்றத்தினர், உட்பட பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.