வன்னிமாவட்ட ஊடகவியலாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்

வன்னிமாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல ஆகியோரிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் தொழில் ரீதியாக சந்திக்கின்ற பிரச்சனைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதார விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வெகுஜன ஊடக ராஜாங்க அமைச்சர் ச.வியாளேந்திரன், மற்றும் அமைச்சின் செயலாளர் சேனாநாயக்க, தகவல் தொடர்பாடல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாலக,வவுனியா மாவட்ட அரசஅதிபர் சமன்பந்துலசேன, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட பணிப்பாளர் கா.இன்பராயா மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.