வன்னிமக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பேன் – டக்ளஸ்

வன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கு தீர்வுகாண்பேன் என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

வன்னியில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கவேண்டும் என்று எதிர்பாத்திருந்தேன். எனினும் கிடைத்த ஒரு ஆசனத்தின் மூலம் வன்னி மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பேன். நான் எந்த அமைச்சையும் எதிர்பார்க்கவில்லை. எனினும் பிரதமரின் பதவி ஏற்பு நிகழ்விற்கு என்னையும் அழைத்திருக்கின்றனர்.அந்த நிகழ்விற்கு வன்னியில் வெற்றிபெற்றவரையும் அழைத்துச் செல்கின்றேன்.

அத்துடன்  கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு அவர்கள்தான் காரணம்.அவர்கள் மேல் மக்களிற்கு நம்பிக்கை இல்லாத நிலையில் நம்பிக்கைக்குரியவர்களை மக்கள் தெரிவு செய்துள்ளார்கள்.என்றார்.