வட்ஸ்அப்-இல் புதிய வசதி அறிமுகம்.

நீங்களும் வட்ஸ்அப் பயன்படுத்துபவரா? நிச்சயம் நீங்கள் வட்ஸ்அப் பயன்படுத்துபவர் தான்! ஏனெனில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில், வட்ஸ்அப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு அல்லவா?வட்ஸ்அப் தனது சேவையில் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இன்றும் அது இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவையில்  முதலிடமாகவே இருந்து வருகிறது.

அண்மையில் “பெயருக்கு அடுத்ததாக பார்கோடு” வசதி வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது

அவ்வாறான புதிய வசதிகளின் வரிசையில் தற்பொழுது அனிமேஷன் ஸ்டிக்கர்” வசதி வாட்ஸ்அப் இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வட்ஸ்அப்-இல் அனிமேஷன் ஸ்டிக்கர் பயன்படுத்துவது எப்படி?

  1. வட்ஸ்அப் இல் வழங்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் பகுதிக்குச் சென்று வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள “+” பட்டனை அழுத்துக.
  2. பின்னர் Playful Piyomaru எனும் ஸ்டிக்கர் பேக் ஐ தேடிப்பெற்று டவுன்லோட் செய்து கொள்க.