வடிவேல் பாலாஜிக்காக சிறப்பு நிகழ்ச்சி… விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ!

Vadivel Balaji Death: Kollywood Celebrities in Shock to Learn The Demise of  Tamil Comedian | India.com

மறைந்த நகைச்சுவை கலைஞர் வடிவேல் பாலாஜி நினைவாக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி உருவாக்கியுள்ளது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. வடிவேலு போன்ற தோற்றம் கொண்ட பாலாஜி தன் உடல்மொழியையும் வடிவேலு போல மாற்றிக்கொண்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இவருக்கு கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே இறந்துவிட்டார்.

இந்நிலையில் அவரது சக கலைஞர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் அவர் பணியாற்றிய விஜய் தொலைக்காட்சி எந்த உதவியும் செய்யவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வடிவேல் பாலாஜியின் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவர்களை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அதில் அனைவரும் வடிவேல் பாலாஜி உடனான நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர். அது சம்மந்தமான ப்ரோமோவை இப்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி…