வடக்கு அயர்லாந்தில் தீ விபத்து

வடக்கு அயர்லாந்தில் எரிவாயு சிலிண்டர்களால் ஏற்பட்ட தீ விபத்தில் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சொத்துக்கள் பலத்த சேதமடைந்ததை அடுத்து அர்மாகில் உள்ள பல குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

அர்மாக் நகரில் உள்ள ஆர்ட்மோர் அவென்யூவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் நடந்துள்ளது.

எனினும், இந்த தீ விபத்தின் போது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ்- தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு அயர்லாந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வடக்கு அயர்லாந்து தீயணைப்பு சேவை நிலையத் தளபதி டெர்ரி மெக்கான் இந்த தீ விபத்து குறித்து கூறுகையில், “பிற்பகல் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்படுவதற்கு முன்னர் மிகவும் கடுமையான தீ ஏற்கனவே உருவாகியிருந்தது.

இதில் இரண்டு சொத்துக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. மேலும் ஒரு சொத்தின் பாதையில் நான்கு வேன்கள் மற்றும் ஒரு கேரவன் இருந்தன. அந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின” என கூறினார்.