வடகொரியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஒன்று கூட இல்லை என்று கூறப்பட்டாலும், அங்கு முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதமாக மூன்று மாதங்களுக்கும் மேலான ஒழுக்க உழைப்புடன் தண்டிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வடகொரியாவோ தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று இப்போது வரை பிடிவாதமாக கூறி வருகிறது.
ஆனால், வல்லுனர்கள் சீனாவிற்கு அருகில் இருக்கும் நாடு நிச்சயமாக வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கும்.
பொருளாதார தடையில் இருக்கும் வடகொரியாவிற்கு சீனா தான் ஆதரவு என்பதால், இந்த உண்மையை மறைத்து வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.


இந்நிலையில், தற்போது நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனையாக வட கொரியா மூன்று மாத கடின உழைப்பை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் கீழ் உள்ளதாகவும், மாணவர்கள் வெளியேறும்போது குடிமக்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என்று சரி பார்க்க  ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 16-ஆம் திகதி பியோங்யாங்கிலும், மாகாண நகரங்களிலும் காவல்துறை அதிகாரிகளுடன், கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணியாத மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை நடத்த ஒரு ஆய்வுக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில், யார் முகக் கவசம் அணியவில்லை என்றாலும், மூன்று மாதங்களுக்கும் மேலான ஒழுக்க உழைப்புடன் தண்டிக்கப்படுவர் என்று வட கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில், தொழிலாளர் முகாம் தண்டனைகள் பொதுவானவை என்பது குறிப்பிடத்தக்கது .