லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் உயிரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் உயிரிழந்ததுள்ளனர். 

தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் மளமளவென பற்றி எரியத் தொடங்கிய தீ சற்று நேரத்தில் எதிர்பாராத விதத்தில் பெரும் சத்ததுடன் வெடித்தது. குண்டு வெடித்ததில் 15 கி.மீ தொலைவுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அருகில் அமைந்திருந்த கட்டடங்கள் சுக்குநூறாக நொருங்கிருப்பதை வெளியான வீடியோக்கள் மூலம் தெரிகிறது. மேலும் இதனால் ஆயிரக்கணக்கனோர் காயம் அடைந்திருப்பதாகவும், இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்ததுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பெய்ரூட் நகரில் உள்ள மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தீவிர மீட்பு பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.  

அந்நாட்டின் துறைமுகப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. Ammonium Nitrate என்ற வெடிமருந்து பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து, 234 கி..மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரைப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு எதிரொலியாக நாளை தேசிய துக்க நாளாக கடைபிடிக்கப்படும் லெபனான் பிரதமர் Hasan Diab அறிவித்துள்ளார்.