லுங்கியில் போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன், இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு ஜோடியானதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒருவராக மாறியுள்ளார். மேலும் இவர் அடிக்கடி சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்கள் மாளவிகா மோகனன் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்து வர்ணித்து வருகின்றனர். தற்போது மாளவிகாவின் உடலமைப்பை பார்த்த ரசிகர்கள் என்ன ஸ்ட்ரக்சர் டா என வர்ணித்து வருகின்றனர்.