லிஃப்ட் படத்திற்காக முழு வீச்சில் இறங்கிய கவின் – வைரலாகும் வித்யாசமான தோற்றம்!

‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தாலும் நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் புகழ் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களான முகின் மற்றும் தர்ஷன் ஆகியோர்களுக்கு விட்டுக் கொடுத்து போட்டியில் இருந்து விலகி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் வினீத் பிரசாத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற புதிய படத்தில் கவின் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பியது.

கொரோனா ஊரடங்கினால் படத்தின் ரிலீஸ் திகதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் இன்னும் கொஞ்சம் படத்தை மெருகேற்றி வருகின்றனர். அந்தவகையில் இப்படத்திற்காக நடிகர் கவின் தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து நடன பயிற்சியாளர் சதிஷ் ட்விட்டரில் பதிவிட்டு கவினின் வித்தியாசமான தோற்றத்தையும் வெளியிட்டுள்ளார்.