லாபம் ஷுட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி – வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விஜய் சேதுபதி கொரோனா லாக்டவுனுக்கு பின்னரும் மிகவும் பிஸியான நடிகராக படங்களில் நடித்து வருகிறார்.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் நடிக்கிறார். இது கிராமப்புற பின்னணியைக் கொண்ட விவசாயம் பற்றிய படமாகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் படக்குழுவினருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.