லாபம் படத்தில் தனது காட்சிகளை முடித்த விஜய் சேதுபதி!

லாபம் படத்தில் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் நடித்து முடித்துக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் நடிக்கிறார். இது கிராமப்புற பின்னணியைக் கொண்ட விவசாயம் பற்றிய படமாகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர். இந்நிலையில் இப்போது தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் விஜய் சேதுபதி நடித்து முடித்துக் கொடுத்துள்ளார். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின்னர் மொத்த படமும் முடியும் என சொல்லப்படுகிறது.