லவ் பண்ண எனக்கும் தான் ஆசை இருக்கு – காதல் ரூட் ஸ்ட்ராங்கா போகுது!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களில் ஆரம்பத்திலே காதல் கதை உருவெடுத்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கிவிடும். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் காதல் இன்னும் வேலை செய்யவில்லை.

பிக்பாஸும் எப்படியெல்லாமோ கோர்த்துவிட பார்க்கிறார். ஆனால், ஒன்றும் நடந்த பாடில்லை. அண்மையில் கூட கேபிரில்லாவுக்கும் பாலாவுக்கு BGM போட்டு காதல் வளர்த்தனர். ஆனால், பாலா அவரை தங்கையாக பார்த்து பழகி வந்ததை பார்த்த ஆடியன்ஸ் விஜய் டிவி முகத்திலே காறி துப்பிவிட்டனர். இருந்தும் கேபிரில்லாவுக்கு பாலா மீது ஒரு கண்ணு இருக்கு..

இதையடுத்து நேற்று ஷிவானிக்கும் – பாலாவுக்கு காதல் அம்பு பாய்ச்சிய பிக்பாஸ் இன்று பாலாவின் பணிப்பெண்ணாக ஷிவானியை நியமித்து டாஸ்க் கொடுத்துவிட்டார். இனிமே கேபிரில்லாவுக்கும் ஷிவானிக்கும் சக்காளத்தி சண்டை ஆரம்பித்துவிடும். கடந்த சீசனில் சாக்ஷியும் லாஸ்லியாவும் கவினுக்காக அடித்துக்கொண்டது போல் இப்போ பாலாவுக்காக அடித்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில் ரியோ காலி ஆகிடுவார் போல, அடேய்… நானே கஷ்டப்பட்டு ஒரு Group Form பண்ணினா இவன் சுலபமா இந்த பொண்ண உஷார் பண்ணி ப்ரோமோவுல இடம் பிடிச்சுட்டானே என புலம்பபோகிறார் ரியோ.