லக்ஷான் சமீரவை விளக்கமறியலில் வைக்குமாறுஉத்தரவு

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ஷான் சமீர வன்னியாராச்சியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்க ஜயரத்ன உத்தரவிட்டார்.

5000 ரூபாய் நாணயத்தாள்கள் 31 ஐ தன்னகத்தே வைத்திருந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

அதன்படி, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்தது.

மேலும் குறித்த நாணயத்தாள்கள் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.