ரூ. 1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அரசு அதிகாரிகளால் அழிப்பு

நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காடு சோதனைச் சாவடியில் கடந்த மே மாதம் மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு சரக்கு லாரியில் கடத்திவரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குத்தாலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் துர்நாற்றம் வீசியதால் நீதிமன்றத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை, அரசு அதிகாரிகள் முன்னிலையில் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து குத்தாலம் பேரூராட்சி குப்பை கிடங்கில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை தூய்மைப் பணியாளர்கள் அழித்தனர்.